யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம்பெண் கொழும்பில் கடத்ப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந் சின்னப்பு சுகிந்தா என்ற 21 வயது இளம் பெணணே, நேற்று கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இருதய நோய் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தனது தாயான 61 வயதான சின்னப்பு தவமணி என்பவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் அனுமதித்த இந்த யுவதி அங்கேயே தங்கியிருந்தார். மறுநாள் காலையில் காலை உணவை வாங்குவதற்காக வெளியே சென்றபோதே இவர் கடத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பை மேற்கொண்டபோது ஒரு ஆண் குரல் கேட்டதாகவும் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
RSS Feed
Twitter



Sonntag, Dezember 20, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen