மீண்டும், மீண்டும் அதே கதை. சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்…….!
இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான இலங்கை இந்திய தொடர்பாடல்களின் போது கட்டவிழும் அதே நாடகம் பம்மாத்து இப்போதும்……….!
எத்தனை காலத்துக்குத்தான் ஏமாற்றுவர் இப்படி………?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்………!
இன்று, நேற்றல்ல. இந்த ஆட்சிப்பீடம் அதிகாரத்துக்கு வந்தமை தொடக்கம் இதுதான் கதை. ஒவ்வொரு தட வையும் இந்திய உயர் மட்டத்துடன் இலங்கை அரச உயர் மட்டம் தொடர்பாடல் கொள்ளும்போது, அதன் முடிவில் இதோ இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு, ஈழத் தமிழர் களுக்கு அதிகாரப் பரவலாக்கம், இவ்வளவு விரைவில் தரு வோம் என்றெல்லாம் உறுதி மொழிகள், அறிவிப்புகள். அந் தக் கயிறை உள்வாங்கி அகமகிழும் இந்திய அரச உயர்பீடம், அந்த அறிவிப்புகளை வரவேற்பதோடு, அதிகாரப் பரவலாக்கலுக்கான முதல்படி இதோ ஆரம்பமாகிவிட்டது என்ற புளங்காகித வெளிப்பாட்டையும் பகிரங்கப்படுத்தும்.ஆனால், அத்தோடு கதை கந்தலாகிவிடும். விடயம் கிணற்றில் போட்ட கல்லாகிவிடும்.
பின்னர் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் இரு நாடுகளின் உயர்மட்டச் சந்திப்பு புதுடில்லியிலோ, கொழும் பிலோ நடக்கும். இதேபோன்ற உறுதிமொழி, ஆரவார அறி விப்பு, அதற்கான வரவேற்பு என்று ஏமாற்று நாடகத்தின் அங்கங்கள் தொடர்ந்தும் கட்டவிழும். பாவம், ஈழத் தமி ழர்கள் இந்த அறிவிப்புகளைக் கேட்டுக் கேட்டுக் களைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, கனவு கண்டபடி, காலத்தை வாழ்க்கையை அவர்கள் கடத்த வேண்டியதுதான்…..!
இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வுத்திட்டத்தை அதிகாரப் பரவலாக்கலுக்கான கட்டமைப்பை வெளியிடுவது தொடர்பில் புதுடில்லிக்குக் கொழும்பு கொடுத்த கால அவகாசங்கள், கால எல்லைகள் பற்றிய அறிவிப்புகள், உறுதி மொழிகள் எத்தனை, எத்தனை? அவையெல்லாம் கடந்துபோன பின்னரும் “திருநாளைப் போவார்” போல “பிள்ளையார் கலியாணம்” போல நாளைக்கு, நாளைக்கு எனக் கொழும்பு விடும் கயிறுகளை விழுங் கியபடி புதுடில்லி தானும் ஏமாறி, இலங்கைத் தமிழர்களை யும் ஏமாற்றியபடி, இந்த விடயத்தை இழுத்தடிப்பது, பேர வலப்பட்டுக் கிடக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்யும் பெரும் துரோகமாகும்.
கடந்த ஜனவரியில் அரசமைப்பின் 13 ஆவது திருத் தத்தை வைத்துக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றியது கொழும்பு. 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவ லாக்கல் விடயங்களில் முக்கியமானவற்றைக் களைந்து, அடிப்படைகளை நீக்கிவிட்டு, அதன் நீர்த்துப் போன வடி வத்தைத் தனது ஏவல் அமைப்பான “அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழு” மூலம் அதனை இடைக்கால ஏற்பாடாக நடைமுறைப்படுத்தும் கோரிக்கையைத் தன்முன் வைக்கும்படி வழிப்படுத்தியது அரசுத் தலைமை. அது அப்படியே வைக்கப்பட்டதும், அந்த நீர்த்து, வடிகட்டிப் போன 13 ஆவது திருத்தத்தின் சக்கை விவகாரங்களைத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாக அரசுத்தலைமை அறிவித்தது. அவ்வளவுதான். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற புது டில்லி, இலங்கையில் அதிகாரப் பகிர்வு முயற்சியில் இது முதல் படி, ஆரம்ப நடவடிக்கை என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி, இலங்கையின் செயற்பாட்டை ஆரவாரமாக வரவேற்றது.
இன்று, இலங்கை அரசின் உயர்மட்டக்குழு புதுடில் லியில் போய் நின்றுகொண்டு “ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் தமிழ் மக்களுக்கு சமஉரிமை வழங்கும் வகையில் சட் டத்திருத்தம், அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கை” என் றெல்லாம் இந்திய அரசுக்கு உறுதியளிக்கும் விதத்தில் அறிவிப்பு விடுக்கையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் புதுடில்லி “அதிகாரப் பரவ லாக்கலுக்கான முதல்படி” என்று வரவேற்ற திட்டம் எங்கே, அதற்கு என்னவாயிற்று என இந்தியாவிடம் நினைவூட்டிக் கேட்க விரும்புகின்றார்கள் இலங்கைத் தமிழர்கள். முதல் படியோடு அந்தக் கட்டடம் குட்டிச்சுவராக அப்படியே விடு பட்டுப் போக விடப்பட்டு விட்டதா, என்பதை இந்தியத் தரப் பிடம் நாம் கேட்பது தவிர்க்க முடியாததாகும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர் நம்புகின்றமை போல வெற்றி பெறுவாரா என்பது வேறு விடயம். ஆனால் அவர் வெற்றி பெற்றாலும், அந்தக் கையோடு தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதை விட வேறு முக்கிய காரி யங்கள் அவருக்கு உள்ளன. அதிகாரப் பரவலாக்கல் என்ற விவகாரத்தில் இறங்கி, தமது முக்கிய விடயத்தைக் கோட்டை விட அவர் ஒன்றும் புத்திசாதுரியமற்ற அரசியல்வாதி அல் லர். ஜனாதிபதித் தேர்தலில் அவர் வென்றால் வென்ற கையோடு பொதுத் தேர்தலை நடத்தித் தனது அரசின் பலத்தை உறுதிப்படுத்துவதே அது மட்டுமே அவரின் ஒரே திட்டமாக இருக்கமுடியும் என்பது வெளிப்படை யானது. சிங்கள,பௌத்த, பேரினவாதச் சிந்தனையைத் தூண்டி, அதில் அரசியல் குளிர் காயும் ராஜபக்ஷக்கள், பொதுத் தேர்தலுக்கு முன்னர் தமிழருக்கு நீதி செய்ய முற் பட்டு, தமது வாக்கு வங்கியை இழக்க மாட்டார்கள் என்பதும் அடித்துக் கூறக்கூடிய விடயம்.
எனவே, ஜனாதிபதித் தேர்லுக்குப் பின்னர் தமிழருக்கு சம உரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் என்ற தற் போதைய உறுதி மொழியையும் வழமையான “பிள்ளையார் கலியாண” அறிவிப்பாகக் கருதிக்கொள்ள வேண்டியது தான்……!
ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சித் தலைமை வெல்லுமாயின், அதன் பின்னர் அடுத்த கட்டப் பொதுத் தேர்தல் திருவிழா ஆரம்பமாகுமே தவிர, அதிகாரப் பகிர்வுக்கான எத்தனங்கள் எவையும் தொடங்கப்போவதில்லை. அப்படித் தொடங்கும் எனப் புதுடில்லி எண்ணுமானால் அது சுத்த முட்டாள்தனமின்றி வேறில்லை.
0 Kommentare:
Kommentar veröffentlichen