
இது தொடர்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் அமைப்பாளர் சமில் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இன்று புலிகளின் செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. அப்படியானால் இன்றைய நாட்டுச் சூழலில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவையா?
இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை தடுத்து வைத்திருப்பது எவ்வாறு நியாயமாகும்.
இது ஓர் இனத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும். 1971, 1988, 89 காலகட்டங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளில் பங்கேற்ற சிங்களவர்கள் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இன்று 10,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியே சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 ஆம் திகதி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen