தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழுவினர்
தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை
இரவு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இக்குழு
தென்னாபிரிக்காவின் தலைநகரான டர்பனுக்கு சென்றுள்ளது. தென்னாபிரிக்காவில்
ஆளும் கட்சியான தென்னாபிரிக்க காங்கிரஸின் 100 ஆவது ஆண்டு நிறைவு
கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்று இத் தூதுக்குழு
அங்கு சென்றுள்ளது.
இக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி அளவில் நாடு திரும்புவார்கள் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இக்குழுவினர் அந்த விஜயத்திற்குப் பின்னர் தென்னாபிரிக்காவிற்கு திடீரென சென்றுள்ளமையானது அரசு தரப்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக கொழும்பு நாளிதழ் ஒன்று தனது பதிப்பில் தெரிவித்துள்ளது.

RSS Feed
Twitter

Donnerstag, Januar 05, 2012
வானதி

0 Kommentare:
Kommentar veröffentlichen