Freitag, 3. Dezember 2010

இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நாவுக்கு சமர்ப்பிக்கும் பணியில் தமிழ் மக்களுக்கு உதவ தயார்: கனடிய பா.உ. ஜிம் கரிஜியானிஸ்

இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றிய விபரங்களை ஐக்கிய நாடுகளை சபைக்கு சமர்ப்பிக்கும் பணியில் கனடா வாழ் தமிழ் மக்களோடு கைகோர்த்து நிற்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ் ஆயத்தமாக உள்ளார்.




இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போரின் போது நடத்திய போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களோடு கைகோர்த்து நின்று அந்தப் பணியில் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜிம் கரிஜியானிஸ் தயாராக உள்ளதாக அவரது அலுவலகம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடாவின் லிபரல் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினராக உள்ள திரு ஜிம் கரிஜியானிஸ் அவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்கள் பலவற்றில் நேரடியாக கலந்து கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இலங்கையின் வன்னி மண்ணில் கொடிய போர்க்குற்றங்களை இலங்கை அரசு நடத்திக் கொண்டிருந்த வேளையில் கனடாவிலிருந்து தமிழர் பிரதிநிதிகள் சிலரை அழைத்துக் கொண்டு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜிம் கரிஜியானிஸ் அங்கு திரு விஜய் நம்பியார் உட்பட பல ஐக்கிய நாடுகள் சபை பிரமுகர்களை சந்தித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடிதான தாக்குதல்களை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை உத்தரவு இடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனினும் விடாப்பிடியாக தற்போது மேற்படி முயற்சிகளில் இவர் இறங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



மேலதிக விபரங்களைப் பெறவிரும்புவோர் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை 1-416 321 5454 begin_of_the_skype_highlighting 1-416 321 5454 end_of_the_skype_highlighting என்ற இலக்கத்திலும் அல்லது அவரது மின்னஞ்சல் முகவரியான Jim@karygiannismp.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

என்பதிலும் தொடர்பு கொள்ளலாம்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen