Donnerstag, 23. Dezember 2010

பிள்ளையானை கைதுசெய்ய குற்றவியல் பிரிவுக்கு அனுப்புங்கள் மின்னஞ்சல்

தற்போது டென்மார்க்கில் தங்கியுள்ள ஆயுததாரி பிள்ளையானை உடனே கைதுசெய்யுமாறு, டென்மார்க் தமிழர் பேரவை அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


இதற்கு பலம்சேர்க்கும் வகையில், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் உடனடியாக கீழ்காணும் டென்மார்க் சர்வதேசக் குற்றவியல் பிரிவுக்கு மின்னஞ்சலை அல்லது தொலைநகலை(FAX) அனுப்புமாறு டென்மார்க் தமிழர் பேரவை தமிழர்களுக்கு அவசர கோரிக்கை விடுக்கிறது.

அதற்கான மின்னஞ்சல் முகவரியும், தொலைநகல் இலக்கங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மின்னஞ்சல்கள் மற்றும் பாக்ஸ் செல்கிறதோ, அவ்வளவு விரைவாக டென்மார்க் அரசு விரைந்துசெயல்படும்.

மகிந்த அரசில் அங்கம் வகிக்கும் ஆயுததாரி பிள்ளையான் பல படுகொலைகள், கடத்தல், கப்பம்பெறல் மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபட்டவர் என்பது யாவரும் அறிந்ததே. தற்போது உள்ள சூழ்நிலையில் சாட்சியங்கள் சொல்வோரும், மற்றும் ஆதாரங்களை வைத்திருப்போரும் உடனடியாக டென்மார் தமிழர்பேரவைக்கு கைகொடுக்குமாறு அவ்வமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அத்தோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு தமிழர்களும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு ஈமெயிலையும் அனுபுவதோடு, பாக்ஸ் இலக்கத்துக்கு உங்களாலான கடிதத்தை எழுதி உடனே அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

மகிந்த பிரித்தானியா வந்தபோது தமிழர்கள் பொங்கி எழுந்து பெருவாரியாகச் செயற்பட்டனர். ஆனால் குறைந்த அளவில் டென்மார்க்கில் தமிழர்கள் வாழ்வதால் டென்மார்க் தமிழர் பேரவைக்கு மற்றைய நாடுகளில் வாழும் தமிழர்கள் முன்வந்து உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.





Tel: 0045 33 30 72 50

Fax : 0045 33 30 72 70

Email : sico@ankl.dk
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen