சிங்களஇராணுவத்தினரால், தமிழர்கள் மீது ஈவிரக்கமின்றி செய்யப்பட்ட படுகொலைக் காணொளிகள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில் கடந்த வாரம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியை அடுத்து மீண்டுமோர் காணொளி வெளிவந்துள்ளது.
இக்காணொளியில் இறுதியில் தோன்றும் யுவதியை உற்றுநோக்குங்கள். அவர் உங்கள் உறவினராகவோ, இல்லை உங்களுக்கு தெரிந்தவராகவோ இருக்கலாம். இவரைத் தெரிந்தவர்கள் இவருக்கு என்ன ஆனதோ என தெரியாமல் இருந்திருக்கலாம்.பாருங்கள் அவ் யுவதியின் பரிதாபமான முகத்தோற்றத்தினை. பின்கைகள் கட்டப்பட்ட நிலையில் தோன்றும் இவ்யுவதி இறுதியில் என்ன ஆனாரோ?
போர்க்குற்ற காணொளிகளோ, புகைப்படங்களோ உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவற்றின்மீது உங்களுக்கான உரிமையைக் கோராதீர்கள். அவ்வாறு கோருகையில் அவை சனல்4 போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு சென்றடையாமல் போய்விடும். எனவே இதைக் கருத்தில் கொண்டு ஏனைய ஊடகங்கள் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
0 Kommentare:
Kommentar veröffentlichen