Dienstag, 16. November 2010

திருப்பூரில் வீடு வீடாக போலீசார் அதிரடி சோதனை


2009ம் ஆண்டு குற்ற எண்ணிக்கையில், மேற்கு மண்டல அளவில் திருப்பூர் மாநகரம் முதன்மை வகிக்கிறது. இந்த ஆண்டு போலீசாரின் தொடர் நடவடிக்கை காரணமாக கணிசமான அளவு குற்றங்கள் குறைந்தன. இந்நிலையில் கடந்த ஒரு மாத த்தில் திருப்பூர் பகுதியில் குற்றங்கள் திடீரென அதிகரித்தது.

குண்டுவெடிப்பு சம்பவம், வீட்டு பூட்டை உடைத்து திருட்டு, துப்பாக்கி திருட்டு, பஸ்சில் தொடர் திருட்டுகள் என குற்றங்கள் திடீரென அதிகரித்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து திருப்பூர் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த போலீ சார் திட்டமிட்டனர். இன்று காலை ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் திருப்பூர் வரவழைக்கப்பட்டனர்.

இன்று காலை 5 மணியளவில் ஆயுதப்படை மைதானத் தில் ஆஜரான ஆயிரத் திற்கும் மேற்பட்ட போலீ சார், அங்கிருந்து 129 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கோல்டன் நகர், மாஸ்கோ நகர், எம்.ஜி.ஆர் நகர், எம்.எஸ்.நகர், செல் லம் நகர், ஆத்துப்பாளையம், அறிவொளி நகர், கஞ்சம்பாளையம், கே.வி.ஆர். நகர், ஜீவா நகர், முருகம்பாளையம், சிறுபூலுவபட்டி, பாண்டியன் நகர் உள்ளி ட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, குடியிருப்பு பகுதியில் இருந்த இருசக்கர வாகன திருடர்கள், முன்னாள் கொள்ளையர்கள், ஆவணங்களில்லாமல் வாகனங்களை வைத்திருந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர். ஏராளமான டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாலை துவங்கி சோத னை திருப்பூர் பகுதி முழுவ தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று மாலை வரை இந்த சோதனை நடக்கும் என போலீசார் தெரிவித்தனர். சோதனை யின் முழுவிவரம் மாலைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen