சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மையமான 8 விதிகளையும் இலங்கை அங்கீகரித்திருந்தாலும், அவைகளை அமல்படுத்தத் தவறிவிட்டது என்று சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் கூறியிருக்கிறது.
உலக வர்த்தக அமைப்புக்கு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், இலங்கை , அதன் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் தொழிற்துறையை ''அத்தியாவசியமான தொழில்கள்'' என்று அறிவிப்பதன் மூலம் சட்டவிரோதமாக்குவதாகவும் இந்த சம்மேளனம் கூறியிருக்கிறது.
ஆண், பெண் இரு பாலாருக்கும் இடையே தரப்படும் ஊதியத்தில் வேறுபாடுகள் நிலவுவது, சிறார்களை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை தொடர்வதாகவும் அது கூறுகிறது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை தொழிலாளர் நல அமைச்சர் காமினி லொக்குகே பிபிசி சந்தேசியவிடம் பேசுகையில் மறுத்தார்.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜிஸ்பி ப்ளஸ் அமைப்பின் கீழ் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் சலுகை முறையில் ஏற்றுமதி செய்வதை, மனித உரிமைகள் மீறல் விஷயம் தொடர்பாக இடை நிறுத்தி வைத்திருக்கிறது.
தற்போது தொழிலாளர் உரிமை மீறல் விஷயம் தொடர்பாக, அமெரிக்காவும் அதன் ஜிஎஸ்பி அமைப்பு தொடர்பாக இலங்கையை விலக்கி வைக்கலாம என்று பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன.
RSS Feed
Twitter



Mittwoch, November 03, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen