முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இலங்கைப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக கூறும் சி.பி.ஐ.யின் அறிக்கையை அண்மையில் ஏற்றுக் கொண்ட தடா நீதிமன்ற நீதிபதி கே.தட்சிணா மூர்த்தி, "வழக்கின் தலைமறைவு முதலாவது குற்றவாளி பிரபாகரன் மற்றும் இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது," என்றார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ் காந்தி, மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில், முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தொடர்பான சதியிபின்னணி குறித்த கோணத்தை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பல்துறை கண்காணிப்பு முகமை (எம்.டி.எம்.ஏ) அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான், அந்த வழக்கில் இருந்து இருவரது பெயரையும் நீக்கி நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்திய சட்டவிதிகளின்படி, குற்றவாளியின் இறப்புக்குப் பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரது பெயர்களும் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அவ்விருவரும் உயிருடன் இல்லை என இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரும், பிரபாகரன் உயிருடன் உள்ளதாக கூறி வரும் நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவரது பெயரை நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.
RSS Feed
Twitter



Dienstag, Oktober 26, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen