Montag, 28. Juni 2010

ராமனுக்கு தெரியாமல் சீதை - 'ராவணா'வுக்கு தெரியாமல் 'சீடி'!

'ராமனுக்கு தெரியாமல் சீதையை கடத்திக்கொண்டு போகிறான் இராவணன்!' இந்த ஒற்றை வரிக்கதை தான் மணிரத்ணம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ராவணா'




படம் வெளியான அன்று இரவே படத்தின் முழு வீடியோவும் இணையத்தளங்களில் வெளியாகிவிட்டது. ஒரு வாரத்துக்குள் 6 வெவ்வேறு பிரிண்டுக்கள் பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. சிடிக்களில் இலகுவாக கிடைத்ததால், கிராமங்களில் கூட படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லையாம்! ஹிந்தியிலும் இதே நிலை தான்.

படம் தோல்வி அடைந்தால் காரணம் திருட்டு வீசிடி தான் என பொறிந்து தள்ளியிருக்கின்றனர் படக்குழுவினர்! இது தொடர்பாக மணிரத்ணத்தின் மனைவி சுஹாஷினி சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்! ' சென்னை முழுவது திருட்டு வி.சி.டிக்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது' சட்ட நடவடிக்கை எடுங்கள்' என்கிறது புகார்.



விரைந்தது தமிழ் நாடு காவற்துறை! எங்கெல்லாம் திருட்டு வி.சி.டிக்கள் அச்சடிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட Home theater உரிமையினால் அங்குள்ளவர்கள் வீடுகளிலேயே படத்தை தெளிவாக பார்க்க முடியும். அப்படி பார்ப்பவர்கள் அவற்றை திருட்டு சிடிக்களில் அடித்து, மதுரைக்கும் சென்னைக்கும் அனுப்பியுள்ளனர்.



இப்படி மண்ணடியில் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு திருட்டு விசிடிக்களை தயாரித்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 3000 படவிசிடிக்கள், உட்பட மொத்தம் 5000 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இதே போல பர்மாபஜாரில் 1150 ராவணன் சிடிக்கள் சிக்கியுள்ளன. துரை என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்களை மீது போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.



'சிடி அடிக்கத்தெரிந்தவனுக்கு ஆயிரம் வழி! இணையம் பார்க்கத்தெரிந்தவனுக்கு இலட்சம் வழி!' - என்கின்றனர் 'இணையப் பாவணையாளர்கள்!'
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen