தலா ஒவ்வொரு புள்ளிகளுடன் இருந்த பிரான்ஸும், தென் ஆப்பிரிக்காவும் மோதிய காற்பந்தாட்ட சுற்று போட்டியில் பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தெ.ஆபிரிக்கா அபார வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதலே படு மோசமாக ஆடி வந்த பிரான்ஸ் பயிற்றிவிப்பாளருடன் தகராறு என பெரும் பிரச்சனைகளுக்குள் சிக்கித் தவித்தது.
எனினும் இந்த போட்டியில் அதிக கோல் அடித்து எல்லாவற்றையும் சரிக்கட்டுமென அதன் ரசிகர்கள் கனவு கண்டனர்.
ஆனால் தெ.ஆபிரிக்க ரசிகர்கள் கணித்தது போலவே பிரான்ஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
பிரான்ஸ் இந்த போட்டிக்கு முன்னர் உலகக்கிண்ண போட்டிகளில் 2 முறை முதல் சுற்றிலேயே மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. 1966 இல் உருகுவே, மெக்ஸிகோவுடனும் , 2002 இல் மீண்டும் உருகுவே மற்றும் இங்கிலாந்துடன்.
இம்முறை உலக கிண்ண போட்டிகளில் பிரான்ஸ் அணி இதுவரை 338 நிமிடங்கள் எந்த கோல்களும் போடாமல் வீணாக்கியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தெ.ஆபிரிக்க அணியினால் அடுத்த சுற்று போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பு மிக குறைவானதே எனினும் முக்கியமான அணியொன்றை வீழ்த்திய பெருமையை பெற்றுள்ளது.
பிரான்ஸ் போட்டி தொடங்கிய ஆக குறைவான நேரத்தில் (30வது நிமிடத்தில் Gourcuff) ரெட் காட் வாங்கியது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் உருகுவே அணியுடன் 25 நிமிடத்தில் ரெட் காட் வாங்கினார் ஹென்ரி.
அடுத்த சுற்று போட்டிகளுக்கு செல்ல இரு அணிகளும் அதிக கோல்கள் போடவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. எனினும் அது நடக்கவில்லை. அதனால் இரண்டு அணிகளுமே உலக கிண்ண போட்டிகளில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறின.
தற்போது தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள ஒரே ஒரு ஆபிரிக்க அணி கானா மட்டுமே ஆகும்.
நடைபெற்ற மற்றொரு போட்டியில் மெக்சிகோ உருகுவே அணிகள் மோதின இதில் 1 கோல் அடித்து உருகுவே வெற்றி பெற்றது.
இரு அணிகளும் தங்களது புள்ளிகளில் முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen