Montag, 24. Mai 2010

விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி


நாம் பேசுவோம் வாருங்கள்...
நமது விடுதலை
குறித்து.
ஒடுக்குமுறையிலிருந்துதான்
விடுதலை பிறக்கிறது.
விடுதலையின் பிறப்பிடம்
அடக்குமுறை என்பதைக் குறித்து
நாம் பேசுவோம் வாருங்கள்.

இன அடையாளம் - நமது
முகவரி அல்ல முகம்.
நாம் சிந்திய செந்நீர்
செழித்து வளர
நாம் பேசித்தான்
தீர வேண்டும்.

ஒதுங்கி இருக்கும்
காலம் இதுவல்ல.
நம்மை ஒதுக்க நினைத்த
அநீதியிடமிருந்து
நீதியை பறித்தெடுக்க
நாம் பேசுவோம் வாருங்கள்.

நீ, நான் யார் பெரியவன்
என்பதை புறக்கணித்துவிட்டு,
நமது நாட்டின்
விடுதலை குறித்து
நாம் பேசுவோம் வாருங்கள்.

அடங்கிக் கிடக்கும் இனம்
நாமல்ல என்பதை
அடையாளப்படுத்தவும்,
அடங்கிப்போன நமது
இன உயிர்களிலிருந்து
உயிர் பெற்று எழவும்,
விடுதலை உயிரோடுத்தான்
இருக்கிறது.
அதைக் குறித்து
நாம் பேசியே
தீர வேண்டும்.

அடக்குமுறையாளர்கள்
நீடித்ததில்லை.
நீதி எப்போதும்
மரணித்ததில்லை.
இந்த உண்மையைக் குறித்து
நாம் பேசுவோம்.

மகிந்தாவின் உறவுகள்
சோனியாவின் இயக்கங்கள்
கருணாவின் துரோகங்கள்
உலகநாடுகளின் மௌனங்கள்
இவைகள் நம் விடுதலையின்மீது
அழுத்திய பாரசுமையை
உடைத்தெறிய
நாம் பேசுவோம்.

அடக்குமுறை என்பது
நீடிப்பதில்லை.
அறையப்பட்ட
சிலுவையிலிருந்துதான்
கிறித்துவம் உயிர்பெற்றது.
புதைக்கப்பட்ட எம்மின
மக்களிடமிருந்துதான்
நமது விடுதலை உயிர்பெறும்.
இந்த நம்பிக்கைக் குறித்து
நாம் பேசுவோம்.

பேசும் வார்த்தைகள்
வீண்போனதில்லை.
நம்பிக்கையோடு
பேசுவோம்.
நமக்கான நாடு
கிடைக்கும்வரை
நாம் பேசிக் கொண்டே
இருப்போம்.

பகைவன் நமது
நாக்கை அறுக்கலாம்;
நம் கரங்கள் எழுதுமே.
நம் உயிரை எடுக்கலாம்
;நம் படங்கள் பேசுமே.
விடுதலை தோற்றது கிடையாது.
நாம் வெற்றியை நோக்கி
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

வெற்றிப் பெற்றப் பின்
என்ன செய்யலாம்
என்பதைக் குறித்து
வாருங்கள் பேசலாம்.

எமது விடுதலையின்
உயிர்நாதம்
தேசிய தலைவன்
உயிரோடு இருக்கிறார்.
அவரோடு இணைந்து
நம் நாட்டை கட்டியமைக்க
வாருங்கள் பேசலாம்.
இது நமக்காக அல்ல;
நம் நாட்டுக்காக.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen