Sonntag, 2. Mai 2010

சுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற தொழிலாளர் தினம் 2010



சர்வதேச தொழிலாளர் தினத்தில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து ஒடுக்கப்படும் தேசிய இனமான ஈழத் தமிழினமும் மே தினத்தை எழுச்சியுடன்  கொண்டாடியது.
சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் ர்நடஎநவiயிடயவண  இல் இருந்து காலை 10:30 மணியளவில் ஊர்வலம் ஆரம்பமானது. சுமார் 10 ஆயிரம் வரையான சுவிஸ் நாட்டவரும் ஏனைய இனத்தவரும் கலந்து கொண்ட இந்த எழுச்சிப் பேரணியில் சில நூறு ஈழத் தமிழர் மட்டுமே கலந்து கொண்டனராயினும் உணர்வுடன் தமது உரிமைக் கோசங்களை எழுப்பிச் சென்றனர்.
எங்களுக்குத் தேவை தமிழீழம்!
எங்கள் தலைவர் பிரபாகரன்!
மகிந்தாவே பயங்கரவாதி!
போர்க்குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்து!
வதை முகாம்களில் உள்ளோரை விடுதலை செய்!
போன்ற கோசங்களை எழுப்பியவாறும், தமிழீழ தேசியக்கொடியையும், தமிழீழ தேசியத்தலைவரின் படங்களையும் தாங்கியவாறும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் வெல்வி வாவிக்கரையில் உள்ள மைதானத்தை அடைந்ததும் பொதுக் கூட்டம் இடம் பெற்றது.
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ், சுவிஸ் நாட்டின் தொழிற் சங்கங்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றோடு இணைந்து நடாத்திய இந்நிகழ்வு போல் சுவிஸ்சின் சுக், செங்காலன் போன்ற மாநிலங்களிலும் பிற்பகலில் நடைபெற்ற மேதின நிகழ்வுகளிலும் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டியதுடன் தாயக அவலத்தையும் தமது உணர்வையும் வெளிப்படுத்தினர்.
தகவல் .ரகுபதி

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen