இமாசலபிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்யானந்தா 50 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டு நேற்று இரவு பெங்களூர் கொண்டு வரப்பட்டார். போலீசார் அவரை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தினர். பின்னர் போலீசார் அவரை ஜெயிலில் அடைப்பதற்காக மாஜிஸ்திரேட்டு வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
மாஜிஸ்திரேட்டு வீட்டின் வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் நித்யானந்தாவுக்கு எதிராக ஆவேச குரல் எழுப்பினார்கள்.
திடீரென்று கூட்டத்தில் இருந்து நித்யானந்தாவை நோக்கி ஒரு செருப்பு வந்தது. போலீசார் அதை தடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் என்பவர் நித்யானந்தா மீது செருப்பு வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி நித்யானந்தாவை வேகமாக அழைத்துச் சென்று விட்டனர். செருப்பு வீச்சு காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புன்னகையுடன் இருந்த நித்யானந்தா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அதே இடத்தில் மற்றொருவர் நித்யானந்தாவை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார்.
Freitag, 23. April 2010
நித்யானந்தான் மீது செருப்பு வீச்சு.
Freitag, April 23, 2010
வானதி
RSS Feed
Twitter






0 Kommentare:
Kommentar veröffentlichen