நூல் ஆசிரியர் : கலைஞர் மு.கருணாநிதி
முத்தமிழ் அறிஞரைப் பற்றி, முதுபெரும் அறிஞர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வரதராசனார், சி.இலக்குவனார் ஆகியோரின் பாராட்டுரையுடன் நூல் தொடங்குகின்றது. அட்டைப்படத்தில் கவிதையைப் போலவே அழகிய மயிலிறகு அலங்கரிக்கின்றது. இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமா? என மனசாட்சி கேட்டது. ஈழத்தமிழர் விசயத்தில் நாம் எதிர்பார்த்தப்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நடந்து கொள்ளவில்லை என்ற கோபம் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்குமே உண்டு. எனக்கும் உண்டு எத்தனையோ கவிஞர்களின் நூல்களுக்கு விமர்சனம் எழுதி விட்டோம். சிறந்த படைப்பாளியான கலைஞர் நூலுக்கும் விமர்சனம் எழுதி விட்டோம். சிறந்த படைப்பாளியான கலைஞர் நூலுக்கும் விமர்சனம் எழுதுவோம் என்று தான் எழுதினேன், என்னை நானே சமரசம் செய்து கொண்டு எழுதினேன்.
கலைஞரின் கையெழுத்திலேயே ஆசிரியர் தன்னுரை உள்ளது. சின்னக்குத்தூசி அவர்களின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. கலைஞர் அதிகம் படிக்காதவர். இலக்கண, இலக்கியம் முறைப்படி பயின்றவரும் இல்லை. ஆனாலும் பேரறிஞர் அண்ணாவிடம் பயின்று சிறப்பாக கவிதை படைக்கும் ஆற்றல் பெற்றார். கலைஞரின் கவிதை மழை, கவிதை சிரபுஞ்சியாக உள்ளது. 1107 பக்கங்களில் சீதை பதிப்பகத்தின் சிறப்பான பதிப்பாக வந்துள்ளது.நூலை ஒரே தடவையில் படித்து விட முடியாது. இராமாயணம், மகாபாரதம் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து, தவணை முறையில் முடிந்து விடலாம். சின்னக்குத்தூசி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டபடி,
கவிதை மழை மூலம் கலைஞரின் புகழ்
இமயத்தின் சிகரத்தை எட்டும்
கவித்துவம் மிக்க கவிதைகள். பாமரர்களுக்கும் புரியும் மிக எளிய நடையைப் பாராட்டலாம். பாமரர்கள் நூலை வாங்க முடியாது. பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும். காரணம் விலை ரூ.400 இதனை மலிவுப் பதிப்பாக வெளியிட்டால், பலரும் வாங்கிப் படிக்க வாய்ப்பாக இருக்கும்.
நூலின் முதல் கவிதை
அணிவகுப்புப் பாடல் 1983 ஆம் ஆண்டு
வாருங்கள் எல்லோரும் இந்தியப்
போருக்குச் சென்றிடுவோம், வந்திருக்கும்
இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்.
ஆனால் இந்த இந்திப் பேய் பாராளுமன்றத்தையும் இன்று ஆட்டிப் படைக்கின்றது. இந்தி ஆங்கிலம் தவிர செம்மொழி தமிழ்மொழிக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கலைஞர் பகுத்தறிவுவாதி என்பதால் கடவுள் வாழ்த்து பாடல் பாடவில்லை. 1938 ஆம் ஆண்டு தொடங்கி 2004 ஆம் ஆண்டு வரை எழுதிய கவிதைகளை வருடங்களுடன் ஆவணப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. 20.09.1956 அன்று முதல் தேதிகளுடன் மொத்தம் 210 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கலைஞரின் நினைவாற்றலுக்கு சான்றாக ஆவணப்படுத்தலுக்குச் சான்றாக தேதிகளுடன் கவிதைகள் உள்ளது.
இராவணன்
தமிழ் மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன்
உருவில் சிங்கம் உள்ளம் தங்கம் யாழ்ப்
பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்த்த
யாழ்ப்பாணத் திருநாட்டான் - மலைத்தமிழன் என்றும்
இலங்கைத் தீவு பற்றி எழுதும் போது
மண்ணெலாம் வீரம் துள்ளும்
எச்சரிக்கை 1945
புலிநிகர் இளைஞர் புறப்பட்டார்
எலிநிகர் தோழர் எதிர்ப்பட்டார்
சிறுத்தையின் உறுமல் சிங்கத்தின் சீற்றம்
கறுத்த கழுதையே! அங்கேன் கனைக்கிறாய் ?
உறைவிட்டெழுந்து உடைவாள் தோழா !
மறைவிடந்தேடிடு மடிந்து போவாய் !
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடன் கழற்று
ஈழத்தமிழரைக் காக்கத் தவறிய வரலாற்றுப் பிழை புரிந்திட்ட போதும் கலைஞர் ஒரு படைப்பாளி என்ற முறையில் பாராட்டுக்குரியவர். 1945 ஆம் ஆண்டு அவர் எழுதிய இந்தக் கவிதை இலங்கையை ஆண்ட தமிழருக்கு இன்றும் பொருந்துவதாக உள்ளது வியப்பு. சிங்களரைச் சாடுவது போல் உள்ளது.
கவியரங்கக் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது.
வாழ்வெனும் பாதையில் 14.04.1970
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டுமென்று
அறப்போர் புரிவோன் அரிமா வீரன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டுமென்று
அயராதின்பம் அனைத்தும் துய்ப்போன்,
வீரனே அல்லன் விலங்கினும் கீழோன்,
தன் வீடு � தன் மனைவி � தன் பிள்ளை � தன் சுற்றும்
என்றிருப்போன் நடத்தும் வாழ்வன்று
எம்நாடு � எம் உரிமை � எம் மொழியாம் - அனைத்தும் காக்க
என்னாலே இயன்றதெலாம் செய்திடுnவேன் என்போன் தான் பொதுமனிதன்
இந்தக் கவிதை இன்றைக்கும் ஈழத்தமிழருக்கும், கலைஞருக்கும் பொருந்தும் விதமாக உள்ளது. மகாகவி பாரதியார் கவிதை எழுதுவது மட்டுமல்ல, கவிதையாகவே வாழ வேண்டியது கவிஞன் கடமை என்பான். மேலே உள்ள கவிதையைப் படித்ததும் என் நினைவிற்கு வந்தது.
என்ன தேசமடா இது ? 17.03.1984
என்ன தேசமடா இது ? இங்கு
எத்தருக்கே வாழ்வு தரும் மோசமடா
நீரும் எண்ணெயும் போல பற்றுப் பாசமடா ! அட
நீலிக் கண்ணீர் வடித்தே கருத்தறுக்கம் நேசமடா !
இப்படி பல்வேறு கவிதைகள் கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தாக உள்ளன. வளரும் கவிஞர்கள் இந்நூலைப் படித்துப் பார்த்து கவிதை நடை, கவிச் சொற்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. சொற்களின் சுரங்கமாக உள்ளது.
காலத்தால் அழியா கவிதை 24.10.2000
கோட்டை ஒன்று மிச்சம் உள்ளதே
"நாட்டுச் சொத்தெல்லாம் நமக்கே உரிமை" என்று
வீட்டுக்குள் சுருட்டி விழுங்கி மகிழ்வதா ?
கலைஞர் 2000ல் எழுதிய கவிதை 2010லும் பொருந்துவதாக உள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen