Mittwoch, 28. April 2010

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருகிறார் முதல்வர்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும்படி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மே 2-ம் தேதி நேரில் சந்தித்து அழைப்பிதழ் தர முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு அதிபர்களும் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டு அழைப்பிதழை முதல்வர் கருணாநிதி இறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், மே 2-ம் தேதி தில்லிக்குச் செல்லும் முதல்வர் கருணாநிதி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து, மாநாட்டு அழைப்பிதழை கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் சோனியா காந்தியை மே 3-ம் தேதி நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை தருவார் எனத் தெரிகிறது.

வரவேற்புக் குழு கூட்டம்: மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமையிலான வரவேற்புக் குழு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டத் துறை அமைச்சர் துரை முருகன், சட்டப் பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டு அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்புவது என்பது குறித்தும், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மாநாட்டுக்கு வருவோரை வரவேற்பது பற்றியும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

முக்கிய நபர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழறிஞர்களை அழைத்து கெüரவப்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen