
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் வெற்றிகரமான நடவடிக்கைகள் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வலையமைப்பபை உடைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மேற்குலக நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்காதமையினால் தமது முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சில நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தாலும் இராஜதந்திர ரீதியில் அந்த நாடுகளை அணுகும் போது அவை தேவையான தகவல்களை வழங்காமல் தவிர்த்து வருவதாகவும் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen