வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் ஒட்டு மொத்த இந்தியாவை கைப்பற்றுவதே மாவோயிஸ்டுகளின் திட்டம் என்று மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் தற்போது அறிவித்துள்ள சண்டை நிறுத்தம், தங்களை பலப்படுத்திக்கொண்டு மீண்டும் ஒன்றிணைவதற்காகத்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
"இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதத்தின் நிலை" என்ற தலைப்பில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், மாவோயிஸ்டுகள் தங்களது மேற்கூறிய திட்டத்திற்காக வலுவான இராணுவ கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும், இதற்கு சில முன்னாள் இராணுவ வீரர்கள் உதவி வருவதாகவும் கூறினார்.
"இன்றைக்கோ அல்லது நாளைக்கோ இந்தியாவை கைப்பற்றிவிட வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நினைக்கவில்லை.அவர்கள் விடுத்துள்ள சுற்றறிக்கை மற்றும் புத்தகங்கள் மூலம் 2050 அல்லது 2060 ஆம் ஆண்டு வாக்கில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது.
ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை.எனவே அவர்கள் தங்கள் திட்டத்தை மிக மெதுவாகவே செயல்படுத்துவார்கள்.
ஒரு நாட்டின் இராணுவப் படை போன்று மாவோயிஸ்டுகள் மிக நன்றாகவே பயிற்சி பெற்றுள்ளனர்.அவர்களுடன் சில முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.
இதை நான் சொல்ல காரணம், மாவோயிஸ்டுகள் எந்த தாக்குதலை நடத்தினாலும், அந்த தாக்குதலின் ஒட்டுமொத்த நடவடிக்கை குறித்தும் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.அவர்களது இந்த பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு ஒரு நாட்டின் இராணுவம் மேற்கொள்வதைப் போன்று உள்ளது" என்று பிள்ளை மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?
வெளி நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 20 கண்டெய்னர்களில் வந்த கழிவுப் பொருட்கள் சிக்கின
ஐ.எப்.எஸ். தேர்வு முடிவு வெளியீடு தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர் வெற்றி
ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொலை
பென்னாகரம் இடைத்தேர்தல்: தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பு மனு தாக்கல்
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு
திமுகவில் மானசீகமாக இணைந்துவிட்டேன்-எஸ்.வி.சேகர்
இந்தியாவைய கைப்பற்ற மாவோயிஸ்டுகள் திட்டம்?
மேலும்...
0 Kommentare:
Kommentar veröffentlichen