Mittwoch, 3. März 2010

விடுதலை புலிகளை மட்டும் அல்ல ஈழத்தை மட்டும் அல்ல முழு தீவையும் அழிக்கும் சீனா.

சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளபாடங்களை அன்பளிப்பாக


வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளபாடங்களை சிறிலங்கா அரசிடம் கையளிக்கும்

உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் சிறிலங்கா பிரதமரின்

அலுவலகத்தில் இடம்பெற்றது.



இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற சிறிலங்கா பிரதமர்

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யங்

சூபிங், இராணுவ தளபாடங்களை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.



சீனாவின் இராணுவ தளபாட உதவிகளை வழங்கும் இந்த நிகழ்வில் வைத்து ஒரு

தொகுதி கண்ணிவெடி அகற்றும் கருவிகளே பிரதமர் ரட்ணசிறி

விக்கிரமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதேவேளை சீனா வழங்கியுள்ள இராணுவ

தளபாட உதவிகளில் சுமார் 50 மில்லியன ரூபா பெறுமதியான கண்ணிவெடிகளை

அகற்றும் கருவிகள் மற்றும் கண்ணிவெடிப் பாதுகாப்பு கவசங்கள் அடங்குவதாக

தெரியவருகிறது.



கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் 50 கருவிகளும், கண்ணிவெடிகளைப்

பாதுகாப்பாக அகற்றும் 50 கருவிகளும் இந்த 50 மில்லியன் ரூபா இராணுவ

உதவியில் உள்ளடங்கியுள்ளன. இவற்றை விட மேலும் பல இராணுவ தளபாடங்களையும்

சீன அரசாங்கம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த

நிகழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சீனா வழங்கியுள்ள

கண்ணிவெடி அகற்றும் கருவிகள் வடக்கில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடிகளை

அகற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப் போவதாக இராணுவம் அறிவித்துள்ளது.



அதேவேளை சீனாவின் இராணுவ உதவிகளில் வேறு என்னென்ன படைத்தளபாடங்கள்

அடங்கியுள்ளன என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen