ஓய்வு பெற்ற முன்னாள் சிறிலங்காவின் தரைப்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்ட செய்மதி தொலைபேசிக்கான கட்டணம் சுமார் 28 இலட்சம் ரூபாய் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.இதுவரையில் நிலுவையாகவுள்ள இந்த தொகையை தேவையேற்படின் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மாதாந்த ஓய்வூதியத் தொகையிலிருந்து கழித்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
2000ம் ஆண்டு யாழ்.கட்டகளைத்தளபதியாக இருந்த காலகட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு உத்தியோகபூர்வ தேவைகளுக்காக செய்மதி தொலைபேசி இணைப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இணைப்பினை பயன்படுத்தி அவர் அமெரிக்கா அவுஸ்திரேலியா, மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தொடர்ச்சியாக அழைப்புக்களை மேறகொண்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கிறது
RSS Feed
Twitter



Donnerstag, Februar 25, 2010
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen