நெதர்லாந்து நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்களிடையே நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பில் வரலாறாக திரண்டு ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தனித் தமிழ்ஈழ அரசே என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் வெளிப்படுத்துங்கள் என கனடித் தமிழ் மக்களின் வாழ்த்துக்களை கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ளது.
நோர்வே, பிரான்ஸ், கனடா என ஈழத்தமிழ் மக்கள் ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் வெளிப்படுத்திய சனநாயக வழி தழுவிய அரசியல் வெளிப்பாட்டை உங்கள் நாடுகளிலும் சனநாய வழிதழுவி ஒரு இனக்குழுமமாக நீங்களும் வெளிப்படுத்த முனைந்து நிற்பது கனடிய ஈழத் தமிழ் மக்களாகிய எமக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது.
ஏனைய நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் வரும் வாரங்களில் இவ் வாக்குக்கணிப்பை நடாத்த முனைந்து நிற்பது எமக்கு மேலும் உத்துவேகம் தருகின்றது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் இவ்வாறான முனைப்புப் பெற்றுள்ள சர்வதேச அரசியல் முன்னெடுப்புக்கள், மக்கள் அவைகளாக அவ்வவ் நாடுகளிலும், அதைக் கடந்து அமையக்கூடிய சர்வதேச கட்டுமானங்களும் ஒன்றுக்கு ஒன்று இணைவாக தம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் சக்திகளாக பயணிக்கும் போது ஈழத்தமிழர் தேசிய விடுதலை மேலும் வலுப்படும், விரைவுபெறும் என கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழு தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.http://www.eelamwebsite.com/
0 Kommentare:
Kommentar veröffentlichen