Donnerstag, 7. Januar 2010

இழந்த நாட்டை மீட்கும் நம்பிக்கையில்


இழந்த நாட்டை மீட்கும் நம்பிக்கையில்!


உடைமைகளை மட்டும் விட்டு வரவில்லை

உயிரையும் விட்டு வந்துருக்கிறோம்

கடைமைகளை எல்லாம் மறந்து விடவில்லை

கயிறையும் துச்சமென்ற போராளியையும் மறந்து விடவில்லை

கரைகடந்து மைல்களுக்கு அப்பால் மையம்கொண்ட

சூறாவளி புயல்கள் நாங்கள்!

தரை தொடும் நாளன்று சந்தொஷ சுனாமியாய்

சுற்றி நிற்போம் தாய் மண்ணை!



வருடும் கவலைகள் வாட்டும் வெறுமைகள்

இழந்த பெருமைகள் எல்லாம் மறந்து

வருடம் முழுதும் காசுக்காக உழைக்கிறோம்

இழந்த நாட்டை மீட்கும் நம்பிக்கையில்!



எம் நாடு திரும்பும் நம்பிக்கை விதையை

தலைமுறை தாண்டி விதைத்து வருகிறோம்!

எம் வீடு எம் மண்ணை

முத்தமிடும் நாள் வருமென்ற கனவில்!

தேசப்பற்றாளன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen