Montag, 4. Januar 2010

புத்தாண்டும் புது நிமிர்வும் 2010 – சுவிஸ்

உலகத்தமிழர்களுக்கு 2009 தந்த பாடங்களில் இருந்து மீண்டு 2010ஐ புது நிமிர்வுடன் இலட்சியம் நோக்கி செல்ல புதிய ஆண்டின் முதல் நாளை சுவிஸ் வாழ் தமிழர்கள் புத்தாண்டும் புது நிமிர்வும் என்னும் பெயரோடு சுவிஸ் சொலொத்தூண் மாநிலத்தில் ஒன்றுகூடி உறுதியெடுத்துக்கொண்டனர்.


15..30 மணிக்கு பொதுச்சுடரினை கலைபண்பாட்டுக்கழக ஒலியமைப்பாளர் திரு. காந்தி ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப்பொறுப்பாளர் திரு. ரகுபதி ஏற்றிவைக்க, அகவணக்கம் இடம்பெற்றது. புத்தாண்டும் புது நிமிர்வும் 2010 இன் உறுதியுரையோடு கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மண்டபம் நிறைந்த மக்கள் கூடியிக்க சுவிஸ் கலைஞர்களோடு, ஐரோப்பிய கலைஞர்கள் பலரும் இணைந்து நிகழ்விற்கு உணர்வூட்டினர். மேற்கத்தைய நடனங்கள்- அக்கினித்தாண்டவமாட, பரதநாட்டியம் - நெருப்பின் சலங்கையாக, நாடகங்கள் - எம்மவர் கதை சொல்ல, வயலின் கச்சேரியென பல்சுவை நிகழ்வுகளோடு, சுவிஸ் சங்கமம் இசைக்குழுவின் இசையில் எழுச்சிப்பாடல்களோடு திரையிசைப்பாடல்களையும் திரு. குணா தொகுத்து வழங்க பாடப்பட்டன. ஏனைய நிகழ்வுகளை ஐரோப்பிய ஊடகக்கலைஞர்களான திரு. ஜஸ்ரின், செல்வி. சிந்து ஆகியோர் பார்வையாளர்களை மகிழ்வித்து உணர்வூட்டி தொகுத்து வழங்கினர்.

அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து தமிழீழ ஆதரவாளர்களில் ஒருவரான உணர்ச்சிப்பேச்சாளர் பேராசிரியர் தீரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததோடு, அவரின் உரையின்போது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள், தமிழீழ போராட்ட வரலாறு, தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைகள், நான்காம் கட்டப்போர், முள்ளிவாய்க்கால் வரை போன்றவற்றையும் விரிவாகக்கூறியதோடு, புலம்பெயர் தமிழ்மக்கள் வாழும் நாடுகளில் நடைபெற்றுவரும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் பற்றியும், அத்தேர்தலின் தேவைபற்றியும், விரிவாக கூறியதோடு தேசியத்தலைவரின் காலத்தில் தமிழீழம் அமைந்தே தீரும் அதை எவராலும் தடுக்கமுயாது என்பதையும் உறுதிபடக் கூறியிருந்தார்.

பேராசிரியர் தீரனின் உணர்ச்சிப் பேச்சுமட்டுமல்ல, அன்றைய நிகழ்வில் அசாதாரணமாக எமது கலைஞர்களும் மேற்கத்தைய நடனம், நாட்டிய நாடகம், நாடகம் போன்ற கலைவடிவங்களின் ஊடாக நடந்தது என்ன? நாம் இங்கு செய்யவேண்டியது என்ன? என்பதை வெளிக்காட்டினர். அதற்கு தங்கள் ஆதரவை மக்கள் ஒவ்வொரு தடவையும் ஆர்ப்பரித்து கரகோசம் வழங்கியது இன்றும் நாங்கள் உறுதியோடும், தெளிவோடும், நம்பிக்கையுடனும் இருக்கின்றோம் என்பதை உணர்த்தியது.

அதே உறுதியோடு கலைஞர்கள் கௌரவிக்கப்பட, தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் உறுதிமொழியோடு அன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது.

http://shiruja.jalbum.net/SWISS/
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen