நெதர்லாந்தின் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து மிச்சிக்கன் நாட்டின் டிட்ரொயிட் நகருக்கு 278 பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த அமெரிக்க விமானம் ஒன்று நைஜீரிய இளைஞர் ஒருவரால் கடத்தப்படுவதற்கு இருந்தது.
எனினும் இம்முயற்சி சக பயணிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. அப்துல் முதல்லாத் எனும் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். முதல் கட்டமாக விமானத்தின் உள்ளே சிறிய ரக வெடிகளை வெடிக்கவைத்து விட்டு பின்னர் விமான பைலட்டுக்களை மிரட்ட இவர் ஆயத்தமான போது உள்ளே தீயால் ஏற்பட்ட புகைவாசத்தால் உஷாரான சக பயணிகள் மற்றும் விமான ஓட்டுநர்கள் அவரை மடக்கிப் பிடித்து முயற்சியைத் தடுத்து விட்டனர்.
அதன் பின்னர் பத்திரமாக டிட்ரொயிட் மெட்ரோபொலிட்டன் ஏர்போர்ட்டில் விமானம் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் எஃப் பீ ஐ உளவு அமைப்பால் கைது செய்யப்பட்ட அப்துல்லா ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது அப்துல்லாவுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இத்தகவல் வெள்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டு தீவிரவாத தடுப்புப் பிரிவின் கீழ் அனைத்து அமெரிக்காவின்
விமான நிலையங்களும் விமான சேவைகளும் எச்சரிக்கப்பட்டன.
0 Kommentare:
Kommentar veröffentlichen