Donnerstag, 17. Dezember 2009

அர்ஜுன ரணதுங்க பொன்சேகா கட்சிக்கு மாறினார்


சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளாரான சரத் பொன்சேகா பக்கம் திரும்பியுள்ளார். இன்று வியாழன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது முடிவினை அறிவித்தார். இதன்போது ரணதுங்க நாட்டின் நண்மைக்காகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தற்போது நிலவும் ஆட்சியில் நிறைய சீர்கேடுகள் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.




இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா கருஜெயசூரிய ஜே.வீ.பீ யின் அனுர திசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். இதேவேளை நேற்றைய தினம் வேறு இரு அமைச்சர்கள் ஆளும் கட்சிக்குச் சென்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அர்ஜுன ரணதுங்க கேப்டனாக விளையாடிய காலத்திலேயே இலங்கை அணி 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen