நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த போலி சாமியார் நித்யானந்தா சிறிது காலம் தலைமறைவாக இருந்தார் பிற்கு நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் பிடதி ஆசிரமத்தில் குருபூஜை நடத்துகிறார்.
இதற்காக தமிழகத்தில் இருந்து அவரது பக்தர்கள் பாதயாத்திரையாக பிடதி செல்கின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து இளம்பெண்கள் சிலர் உட்பட மொத்தம்16 பேர் பாதயாத்திரையாக பிடதிக்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் யாத்திரையை தொடங்கினர். திருவண்ணாமலையில் புறப்பட்ட இவர்கள் செங்கம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பிடதி ஆசிரமத்தை அடைவார்கள். இதே போல மற்ற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரைக்கு தயாராகி வருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து யாத்திரை மேற்கொண்ட நித்யானந்த சீடர்களிடம் ஏன் இந்த யாத்திரை என்றபோது, வரும் 25ம் தேதி குருபூஜை நடக்கிறது. அந்த பூஜையில் கலந்து கொள்வதற்காகத்தான் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறோம். 24ம் தேதி இரவு பிடதி ஆசிரமம் சென்று அடைவோம்.
குருபூஜையில் நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுவார். சொற்பொழிவு முடுந்தவுடன் அவரிடம் ஆசி பெற்று திரும்பவோம். வெள்ளித்தட்டில் தங்கத்தால் ஆன செருப்பை வைத்து அவருக்கு கொடுப்பதற்காகத்தான் எடுத்துச்செல்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen