தென்னிந்திய நடிகர்கள் தங்களை ஏன் வந்து பார்க்கவில்லை என்று தன்னிடம் இலங்கைத் தமிழர்கள் கேட்டதாக நடிகை அசின் தெரிவித்திருக்கும் நிலையில், நடிகர்கள் இலங்கை வருவது தொடர்பாக பரிசீலிப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற ஐஃபா விழாவினையே நடிகர்கள் புறக்கணிக்குமாறு கோரியிருந்தோம். இந்நிலையில் அசின் தனது தொழில் நிமிர்த்தமாகவே இலங்கைக்கு சென்றிருக்கிறார். ஆகையினால் அவர்மீது தடை விதிப்பது பற்றி மீள்பிரிசீலனை செய்யப்படும். அதேவேளை தென்னிந்திய நடிகர்கள் குழு இலங்கை செல்வது தொடர்பாகவும் எமது கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் சரத்குமார் மேலும் குறிப்பிட்டார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen