ரெடி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்புக்கு நடிகை அசின் இலங்கை சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் அசினுக்கு எதிராக கோவையில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
மே 17 இயக்கம் சார்பில் கோவையில் முக்கிய இடமான காந்திபுரம் 100 அடி ரோடு, சிவானந்தாகாலனி, ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
’’தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்வது போல் நடித்து ராஜபக்சேயுடன் இணைந்து தமிழீன படுகொலையை மறைக்க உதவும் நடிகை அசினை கண்டிக்கிறோம்’’என்று போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
0 Kommentare:
Kommentar veröffentlichen