இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது குறித்து ஆராயப்பட்ட இதில் என்ன இருக்கிறது ஆராய?சும்மா ஒரு பேருக்கு கமிட்டியை போடுவது,பின்பு கமிட்டி அறிக்கை கொடுத்து விட்டது என்று கூறி மேலும் நீட்டிப்பது.இவற்றை வழக்கமாக கொண்டு இருக்கும் மத்திய பார்ப்பனிய அரசு, தங்களுக்கு சான்றாக அறிக்கை எழுதுவதற்கு தமிழக அரசையே நம்பி இருக்கிறது.
அதாவது, சுருங்கக் கூறின் தமிழக கியு பிராஞ்ச் போலீசார்களை நம்பி இருக்கிறது.இவர்கள் கொடுக்கும் தகவல்கள் தான் தமிழக அரசின் வாதங்களாக மாற்றம் பெற்று, தமிழக அரசின் வழக்கறிஞர் எஸ்.தனஞ்சயன் தெரிவிக்கிறார்..
அல்லது தெரிவிப்பார் என்று கொள்ளலாம் முதலில் இருவேறு விசயங்களைப் பார்க்கலாம் இது குறித்து, இந்த தடை குறித்து ஒன்று இந்திய அரசு ஒரு முடிவை எடுத்துவிடும்.இந்திய சங் பரிவார் கும்பலாக உள்ள இந்திய உள்துறை அதிகாரிகள் தடையை போட்டு விடுவது என்று முடிவு எடுத்துவிட்டு, தமிழக அரசின் தங்களது செயலருக்கு தெரிவித்து விடுவார்கள்..
தமிழக அரசு செயலர், கியூ பிராஞ்ச் என்ற உளவு அமைப்பு இருக்கவே இருக்கிறது என்று ரிப்போர்ட் கேட்பார்கள்..அவர்கள் மிக நன்றாக தூங்கிக் கொண்டும்..அரசின் பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டும் இருக்கிறார்களே..உடனே ஒரு அறிக்கையை கொடுப்பார்கள், எப்படி என்று பார்த்தல் தலை சுற்றி கீழே விழத்தான் வேண்டும்..( இவர்கள் எப்படி வேலை செய்வார்கள் என்பதை
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக காண்போம். ) இந்த அறிக்கையை வைத்துதான் மத்திய அரசு விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு தடை விதிக்கிறது என்று கருதலாம் ஒரு சாரர் சரி இவர்களின் வாதப்படியே பார்த்தாலும், தமிழக அரசின் வழக்கறிஞரும் சரி, மத்திய அரசின் வழக்கறிஞர் அமர்ஜித் சிங்கும் சரி தங்களது வாதங்களை இப்படி கூறுகிறார்கள்.
இது கியூ பிராஞ்ச் அறிக்கை, எஞ்சி இருக்கும் விடுதலைப் புலிகள் தமிழகத்தில் காலூன்ற விரும்புகின்றனர்.அவர்களுக்கு இங்கு ஆதரவு சக்திகள் உள்ளன,அவர்கள் தங்கள் இயக்க வளர்ச்சிக்கு போதைப் பொருள் கடத்துகின்றனர்,ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கடத்துகின்றனர்.இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன தமிழகத்தில் என்றும்,ஆதாரங்களை மறந்தும் கொடுக்காமல் வெறும் வெற்று அறிக்கை ஒன்றை, காலங்காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கொள்கையை அப்படியே கொடுப்பது மறுபுறத்தில் மத்திய அரசின் சார்பாக 'ரா' அமைப்பு எவ்வாறு அறிக்கை தாக்கல் செய்கிறார்கள் என்று பாருங்கள்.
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்கள் இணைய தளங்கள் மூலம் என்று விடுதலைப் புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் இவ்வாறு இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை விசமப் பிரச்சாரங்களை கருத்துக்களாக, கட்டுரைகளாக எழுதி வருகிறார்கள், இதனால் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ( இந்த தடவை அதிகாரிகள் என்று சேர்த்துக்கொண்டு உள்ளனர்.அதிகாரிகள் என்றால் யார் என்றெல்லாம் கிடையாது சப் இன்ஸ்பெக்டர் கூட அதிகாரிகள் தான்.அவரா அரசின் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கிறார்...? ) உயிர்களுக்கு ஆபத்தாம் இதனால் பாதுகாப்பு கவனம் கூடுதலாக இருக்கிறதாம் எப்படி காரணம் கண்டு பிடித்துள்ளார்கள் இந்த பார்ப்பனக் கூட்டம்..!
இந்தியாவிற்கு எதிராக எழுதுகிறார்கள் என்றால் எப்படி..? பொத்தம் பொதுவாக கூறினால் எப்படி..? காங்கிரஸ் அரசுக்கு எதிராகவா..? பா.ஜ.க அரசுக்கு எதிராகவா..? அல்லது இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்யும் பொழுதா...? இந்திய அரசுக்கு எதிராக என்றால் அது என்னங்கப்பா இனிமேலாவது கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் அய்யா...? ஒரு இனத்தை யுத்தம் என்ற பெயரில் அழித்துவிட்டு, எஞ்சியவர்களை முள்வேலி முகாம் மற்றும் ஆடு மாடுகளை போல திரிய விட்டுவிட்டு இலங்கை அரசு சொல்கிறது விடுதலைப் புலிகள் இலங்கையில் இல்லை என்று உரத்து சொல்கிறது உலக நாடுகளுக்கு.இந்திய பார்ப்பன அரசு சொல்கிறது விடுதலைப்புலிகள் தமிழகத்தில் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று.அதானால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை என்று யாரைத்தான் நம்புவது, எந்த நாடு சொல்வது உண்மை..? குழப்பி குழப்பி பதில் சொல்கிறார்கள்..!
இப்படி எடுத்துக் கொள்ளலாமா...? தமிழக அரசின் இந்திய அரசின் இந்த தடையை இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லை ஆடு மாடுகள் போல தமிழ்க் கூட்டம் இருக்கிறது,எனவே மீண்டும் விடுதலைப் புலிகள் வருவதை தவிர புதிதாக ஒன்றும் இல்லை என்று..!
ஈழதேசம் செய்திக்குழு
0 Kommentare:
Kommentar veröffentlichen