விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்த நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கும் படி கேட்டு, தமிழக மக்கள் உரிமை கழகம் சார்பில் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி எம்.வை.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது.
அதன்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி,
"தடை நீடிப்பு குறித்து விசாரித்து வரும் நீதிமன்றில் தங்களது தரப்பு கருத்தை மனுவாகத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எனினும், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சார்பாகவோ, அதன் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ தவிர வேறு எவரையும் அனுமதிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்ற விசாரணையில் மனுதாரர் பங்கேற்க அனுமதிக்க முடியாது" என்றார்.
விசாரணைக்குப் பின் தமிழக மக்கள் உரிமைக் கழகம் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
0 Kommentare:
Kommentar veröffentlichen