Mittwoch, 4. September 2013

விழிப்புடன் இல்லாத இந்தியா

மிகப்பெரிய பொருளாதாரச் சறுக்கலை இந்தியா எதிர்கொள்ளும் இந்த நிலைமையிலும்கூட, நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றுவது இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பும், நமது சேமிப்பு உணர்வும்தான் என்பதைப் பார்த்தோம்.

 ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும் பொறுப்பின்மையும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மேற்பார்வையில், 587 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனப் பொருள்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிந்தது.

வேடிக்கை என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூலதனப் பொருள்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதுதான். நாம் தயாரித்துக் கொண்டிருந்த பொருள்களேகூட இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

சுங்கம் மற்றும் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக 339 பில்லியன் டாலர் அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குப் பொருள் என்ன? அதே அளவுக்கு இந்தியா தனது வளத்தை இழந்திருக்கிறது என்பதுதானே?
இந்தியாவின் நஷ்டம் யாருக்கு லாபம்? இந்தியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஜெர்மனியோ, ஜப்பானோ, பிரான்úஸா, ரஷியாவோ லாபம் அடையவில்லை. மாறாக லாபம் அடைந்திருக்கும் நாடு எது தெரியுமா? சீனா!

2006-07 முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் இறக்குமதியால் சீனாதான் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்திருக்கிறது. 2006-07இல் இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 13 சதவீதமாக இருந்தது. அதுவே 2011-12இல் 17 சதவீதமாக அதிகரித்தது. விளைவு, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2012-13 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் 175 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான அணுகுமுறையும், நிதிநிர்வாகமும்தான்.

2001-02இல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 1 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 3-வது ஆண்டில் 9 பில்லியன் டாலரானது. பின்னர், அதுவே 16 பில்லியன் டாலர் (4-வது ஆண்டு), 23 பில்லியன் டாலர் (5-வது ஆண்டு), 19 பில்லியன் டாலர் (6-வது ஆண்டு), 28 பில்லியன் டாலர் (7-வது ஆண்டு), 39 பில்லியன் டாலர் (8-வது ஆண்டு), 41 பில்லியன் டாலர் (9-வது ஆண்டு) என மொத்தம் 175 பில்லியன் டாலராக ஆகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையான 325 பில்லியன் டாலரில் இது 54 சதவீதமாகும்.

150 பில்லியன் டாலருக்கு அதிகமாக சீனாவில் இருந்து மட்டுமே மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருள்களின் மதிப்பைவிட மூன்று மடங்கு மதிப்புள்ள பொருள்களை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்!
இந்தியாவின் சிறந்த நண்பனாக சீனா என்றுமே இருந்ததில்லை. சீனாவுடனான பனிப்போர் தொடர்கிறது. அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்திய எதிர்ப்பையே தனது தேசியவாதத்தின் உயிர்மூச்சாகக் கொண்டுள்ள பாகிஸ்தானின் நட்பு நாடாகவும் சீனா விளங்கிவருகிறது.

வெறும் நட்பு நாடாக மட்டுமல்லாமல், நம்பத்தகுந்த கூட்டாளியாக பாகிஸ்தானுக்கு பொருளாதார, ராணுவ, தொழில்நுட்ப உதவிகளை அளித்துவருகிறது சீனா. பாகிஸ்தானுக்காக அணுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உருவாக்கிவருகிறது. பொருளாதார நலன் ஒரு பக்கம் இருந்தாலும், தான் நஷ்டமடைந்து சீனா லாபம் அடைய உதவுவது என்பது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

 சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) என்பது, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவப் பாதுகாப்புச் செலவினங்களுக்கு சமமானதாகும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கணிப்புப்படி, சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுதோறும் 63 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. எனவே, இந்தியாவின் வர்த்தகம் சீன பாதுகாப்புத் துறையின் 3 ஆண்டு செலவினங்களை ஈடுகட்டுவதாக அமையும்.

மேலும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னொரு பக்கம் சீனப் பொருளாதாரத்தை வலுவாக்குகிறது. இது இந்தியாவின் புவியியல்சார்ந்த அரசியல் நலன்களுக்கு உகந்ததல்ல.
பொருளாதாரரீதியாகவும், புவியியல்சார்ந்த அரசியல்ரீதியாகவும் இந்தத் தவறை மத்திய அரசு ஏன், எப்படி இழைத்துவருகிறது? இதற்கு பதில் இல்லை.

சீனா தனது பொருள்களை கொண்டுவந்து இந்தியாவில் கொட்டுவதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பதிலாக, தனது நடவடிக்கைகளின் மூலம் சீனாவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறைமுகமாக உதவி வருகிறது. மெத்தப் படித்த மேதாவிகளின் தலைமையிலான இன்றைய அரசு, இதை அனுமதிக்கிறதா இல்லை இதுகூடத் தெரியாமல், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் திறனில்லாமல் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.

ரொக்கச் செலாவணி நிலை வலுவாக இருப்பதால், மிகவும் குறைவான வட்டி விகிதம் அளித்து இந்திய இறக்குமதியாளர்களை ஈர்த்து பல பில்லியன் டாலர் அளவுக்கு தனது மூலதனப் பொருள்களை இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்துவருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்னும் சற்று விழிப்புடன் இருந்திருந்தால் இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ, மட்டுப்படுத்தியிருக்கவோ முடியும்.


விழிப்புடன் இல்லாத இந்தியா

உலக வர்த்தக அமைப்பில் சீனா 2001இல் இடம்பெற்றது. அதற்கு முன்னரே, உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தம் காரணமாக இந்தியா இறக்குமதி வரிகளை பெருமளவு குறைத்திருந்தது. 1990-ல் இந்தியாவில் இறக்குமதியை ஒட்டிய வரி 50 சதவீதமாக இருந்தது. அதுவே, 1990-களின் இறுதியில் 20 சதவீதமாகக் குறைந்தது. 1980-களில் இருந்தே சீனா தனது பொருள்களை கொண்டுபோய் உலகம் முழுவதும் கொட்டியது. கொட்டியது என்றால் அடக்க விலைக்கும் குறைவாகவே விற்றது.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க உலக வர்த்தக அமைப்பில் விதிமுறைகள் உள்ளன என்பதால், சீனப் பொருள்கள் குறித்து இதற்கு முந்தைய அரசுகள் மிகவும் தீவிர விழிப்புணர்வுடன் செயல்பட்டன. இந்தியாவில் பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிரான நடவடிக்கைகளை நரசிம்ம ராவ் அரசு ஆட்சியில் இருந்த காலம் முதல் தொடர்ந்து இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

1995 முதல் 2001 வரை பொருள்களைக் கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக 248 வழக்குகள் இந்தியாவால் தொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியாவைவிட அமெரிக்கா மட்டுமே அதிக வழக்குகளை (255) தொடுத்திருந்தது. இந்தியா தொடுத்த வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கு சீனாவுக்கு எதிரானதாகும்.

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றது முதல் நிலைமை தலைகீழாக மாறியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வேகமெடுத்த சீனப் பொருள்களின் இறக்குமதியும், இந்தியாவில் இறக்குமதி வரி குறைப்பும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. இந்தியாவில் வர்த்தகத்தையொட்டிய வரி விகிதம் 1990-ல் 50 சதவீதம் ஆக இருந்தது, 1998இல் 20% ஆகவும், 2006இல் 14% ஆகவும், 2007இல் 12% ஆகவும், 2008இல் 8% ஆகவும் குறைந்தது. வரிகள் குறைக்கப்பட்டதில்கூடத் தவறில்லை. என்ன இறக்குமதி செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்கிற கண்காணிப்பு இருந்திருந்தால் நிலை

Dienstag, 23. Juli 2013

பணத்தை பதுக்கும் காமெடியர்கள்: மயில்சாமி பாய்ச்சல்

சம்பாதித்த பணத்தை காமெடி நடிகர்கள் பதுக்குவதாக மயில்சாமி குற்றம் சாட்டினார்.
நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரகளபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தானு, டைரக்டர் நாராயணசாமி, நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மயில்சாமி பேசியதாவது:–
கருணாசையும், கஞ்சா கருப்பையும் நான் பாராட்டுகிறேன். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து படங்கள் தயாரிக்கிற இரண்டே இரண்டு காமெடியர்கள் இவர்கள் மட்டும்தான். இந்த காமெடி நடிகர்களால் திரையுலகில் உள்ள நூறு குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்கிறது. மற்றவர்கள் செலவழிக்காமல் பதுக்குகின்றனர்.
ஒரு குட்டிக்கதை சொல்றேன். ஒருத்தன் கோடி கோடியா சம்பாதித்து தானம் தர்மம் செய்யாமல் குழி தோண்டி பணத்தை புதைத்து வைத்தான். அப்பப்பப அந்த பணத்தை பார்த்துவிட்டு மூடி விடுவான். இதை கவனித்த ஒருவன் அந்த பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டான். பணத்தை காணாமல் அவன் வாயில் அடித்து அழுதான். அந்த வழியாக வந்த ஒருவர் அவனிடம் கேட்டார். ஏண்டா இந்த பணத்தை நீ யாருக்காவது கொடுப்பியா? இல்லை இல்லை கொடுக்க மாட்டேன்னான் அவன்.
தானதர்மம் பண்ணுவியா. இல்ல மாட்டவே மாட்டேன் என்றான் அவன். இதை எடுத்து உனக்கு தேவையானதை வாங்க செலவாவது செய்வியா? அதையும் செய்யமாட்டேன்னான். கடைசியா சொன்னார். செலவே செய்யாம இந்த பணத்தை வச்சிக்கிறதுக்கு இந்த பணம் காணாம போச்சுன்னு ஏன் நினைக்கிற இங்கதான் இருக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தானே என்றார். அப்படி பணத்தை வெட்டியா புதைச்சு வைக்காமல் சினிமாவுல முதலீடு செய்து குடும்பங்களை வாழ வைக்கும் கருணாசையும், கஞ்சா கருப்பையும் வாழ்த்துகிறேன்.

Montag, 10. Juni 2013

நாளாந்தம் 15 ஆயிரம் ரூபாவை பிச்சையாகப் பெற்றவர் கைது

பிச்சையெடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு 15,000 ரூபாவை பெறும் பிச்சைக்காரரொருவரை பொரளைப் பொலிஸார் கைதுசெய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது நீதிவான் ரஷந்த கொடவெல பிச்சைக்காரரை எச்சரித்து விடுதலை செய்தார்.
நாளாந்தம் பல குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக நடமாடும் போது அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்காமல் பிச்சைக்காரர்களை கைதுசெய்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்வது ஏன் என்றும் நீதிவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.
பொரளை சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுத்ததாக பொரளை பொலிஸார் ஒரு யாசகரை கைதுசெய்ததாகவும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பிச்சை எடுத்ததில் இந்நபர் 1500 ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாகவும் இவரை விசாரணை செய்ததில் நாளொன்றுக்கு பிச்சை எடுப்பதன் மூலம் இவர் 15,000 ரூபாவை வருமானமாகப் பெறுவதாகவும் பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Samstag, 16. März 2013

கவிஞர் வைரமுத்துவின் அப்பா மரணம்


கவிஞர் வைரமுத்துவின் அப்பா ராமசாமி தேவர்(87) சிறுநீரக கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். தேனிமாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி‌யை சேர்ந்தவர் ராமசாமி தேவர். கவிஞர் வைரமுத்துவின் அப்பாவான ராமசாமி தேவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடியும் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி இன்று(16.03.13) பிரிந்தது. ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், வைரமுத்து, பாண்டியன் ‌என்ற இருமகன்களும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் வைரமுத்து. நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகி, கவிப்பேரரசாக உயர்ந்தவர். மறைந்த ராமசாமி தேவரின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரான வடுகப்பட்டியில் ந‌ாளை(17.03.13) நடக்கிறது. வைரமுத்துவின் அப்பா மறைவுக்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்

Donnerstag, 9. Februar 2012

நடிகர் அமிதாப்பச்சனுக்கு, ஆபரேஷன்


நடிகர் அமிதாப்பச்சன்(69) போஜ்புரி மொழியில் தயாராகும் ’கங்காதேவி’ என்ற படத்தில், தன் மனைவி ஜெயாவுடன் தற்போது நடித்து வருகிறார். அவருக்கு, சில நாட்களாக வயிற்று வலி இருந்து வருகிறது.
இதுபோன்ற வலி தொடர்வதால், டாக்டர்கள் அவரது வயிற்றை பரிசோதித்தனர். இன்று அவருக்கு, சி.டி., ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட உள்ளது.

இதையடுத்து, நாளை மறுநாள் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Donnerstag, 5. Januar 2012

ஆபத்தில் இந்திய விமானத்துறை?

இந்தியாவின் பயணிகள் விமானப்போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் பரத் பூஷன், இந்தியாவின் பல உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமைகள் கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த நிதி நெருக்கடியானது பயணிகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகவீனத்தை காரணம் காட்டி விமான ஓட்டிகள் விடுப்பு எடுப்பது ஒரு தொற்றுநோய் போல உள்ளது என்றும் அது விமான சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் பரத் பூஷன் கூறுகிறார்.
நிதிநிலை மோசமாக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய நியாயமான காரணங்கள் இருக்கின்றன எனவும் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால் நிதிநிலைமைகளை மட்டுமே கருத்தில் கொண்டு பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று கூற முடியாது என்று கூறுகிறார். இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையின் முன்னோடி என்று கருதப்படும் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்.
வெளிநாடுகளில் கூட இப்படியான நிதி நெருக்கடியில் பல விமான சேவை நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார். ஒரு விமானம் விபத்தை எதிர்கொண்டு விட்டதென்றால் அந்த நிறுவனமே திவாலாகிவிடும் எனும் நிலை இருக்கும் போது, பாதுகாப்பு விஷயங்களில் சமரசங்களை செய்யமாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கா போன்ற நாட்டில் கூட 90 சதவீதமான விமான நிறுவனங்கள் திவாலாகும் நிலையில்தான் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும், உதிரிப்பாகங்கள் கூட வாங்கும் நிலையில் பல விமான நிறுவனங்கள் இல்லாத நிலையில், அவர்கள் விமானத்தை தரமாக வைத்திருந்து பாதுகாப்பாக இயக்குவார்கள் என்று கருத முடியாது என்கிறார் இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் தலைவரான சுதாகர் ரெட்டி.
பல நிறுவனங்களில் விமான ஓட்டிகள் உட்பட பலருக்கு சரியான நேரத்துக்கு ஊதியங்களை கொடுக்க முடியாத சூழல் உள்ளபோது, அவர்கள் மருத்துவ விடுப்பு உட்பட பலவித காரணங்களால் விடுப்பில் செல்லும் போது எப்படி விமான சேவையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்புகிறார்.